தளபதி விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால், எனது ஆதரவு ரஜினிக்கு தான் என்று சென்னை ரோகினி திரையரங்க உரிமையாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில், பெரும்பாலான இடங்களில் மோடி முன்னிலை பெற்று வருகிறார். இந்த நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், ரோகினி சில்வர் ஸ்கிரீன் திரையரங்கின் நிர்வாக இயக்குனர் ரேவந்த் சரண் தனது கருத்தையும் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஒருவேளை தளபதி விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால், எனது ஆதரவும், வாழ்த்தும் ரஜினிக்கு தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ஒருவர் ஏன் என்று கேள்வி எழுப்ப, அதற்கு ரேவந்த் கூறுகையில், மற்ற ஊழல் அரசியல் கட்சிகள் போன்று இல்லாமல், ரஜினிகாந்த் ஒரு நேர்மையானவர். மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
If #Thalapathy doesn't enter politics by then, I really wish it is #Rajnifor2021
— Rhevanth Charan (@rhevanth95) May 23, 2019