பாடகி வைத்த பார்ட்டியில் கொரோனா பரவியதா?.... எகிறும் குற்றச்சாட்டுகள்... மௌனம் கலைத்த பாடகி..!
முகப்பு > சினிமா செய்திகள்இந்தியாவை சேர்ந்த பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர் சமீபத்தில் லண்டன் சென்று திரும்பிய நிலையில் இவருக்கும் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. நீண்ட நாள் மருத்துவமனையில் இருந்த அவர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் கனிகா கபூர் பார்ட்டி வைத்து கொரோனா நோயை பரப்பியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கனிகா கபூர் இது பற்றி மௌனம் கலைத்துள்ளார். அதில் அவர் "நான் மும்பையிலிருந்து திரும்பிய பிறகு எனக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதித்த பின்னர் நான் தனிமையில் இருக்க வேண்டும் என்று எதுவும் கூறாததால் நானும் அப்படி இருக்கவில்லை.
எனினும் மூன்று நாட்கள் கழித்து எனக்கு அறிகுறிகள் ஏற்பட்டபோதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். இதற்கு இடையில் எனது நண்பர் ஒருவரின் வீட்டில் மத்திய உணவு மற்றும் டின்னருக்கு சென்றிருந்தேன். இதை தான் பார்ட்டி என்று கூறுகின்றனர். இதில் எதிலுமே உண்மை இல்லை அதுவும் இல்லாமல் என்னிடம் தொடர்பு கொண்டவர்களிடம் பரிசோதிக்கப்பட்ட போது ஒருவருக்கு கூட கொரோனா இல்லை. எனவே நான் அமைதியாக இருப்பதைக் காரணம் காட்டி தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.