நடிகர் விஜய் 'மரண மாஸ்' செயல்... ஒரே போன் கால்.... 11 பெண்கள் காப்பாற்றப்பட்டனர்... யார் இவர்கள்...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அது மேலும் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. ஊரடங்கால் மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் விஜய் செய்த ஒரே போன் கால் 11 பெண்கள் காப்பாற்றப்பட்டனர் Thalapathy Vijay helps rescuing 11 women during corona lockdown

கொரோனா நேரத்தில் நடிகர் விஜய் ஆரம்பம் முதலே மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். முன்பதாக ஏழை எளிய ரசிகர்களின் வங்கி கணக்குகளில் 5 ஆயிரம் டெபாசிட் செய்த நிலையில், அடுத்து அவர் செய்திருக்கும் செயல் தற்போது வைரலாகி வருகிறது.

சென்னையை சேர்ந்த தேவிகா என்ற பெண் தன் குடும்பத்தினருடன் தூத்துக்குடியில் ஒரு திருமணத்திற்கு சென்று உள்ளார்.  அப்படி சென்ற  இடத்தில் லாக்டவுன்  போடப்பட்டதால், அவர்கள் அனைவரும்  அங்கேயே தங்கி உள்ளனர். கையில் இருந்த பணமெல்லாம் செலவழிந்த நிலையில், மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். அதில் தேவிகா தவிர மற்ற 10 பெண்கள் அனைவரும் 20 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு அவர்கள் தளபதி ரசிகர் மன்றத்தை அணுகி உதவி கேட்டுள்ளனர். அவர்களது சூழ்நிலையை நிர்வாகிகள் நடிகர் விஜய்க்கு அறிவித்துள்ளனர். உடனே அவர் ஒரே ஒரு போன் கால் செய்து, அவர்கள் பத்திரமாக சென்னை திரும்பி வரும் ஏற்பாடுகளை செய்தார். இதனையடுத்து தற்போது அவர்கள் அனைவரும் பத்திரமாக சென்னையை வந்தடைந்துள்ளனர். அவர்கள் நடிகர் விஜய்க்கு மனதுருகி நன்றி தெரிவித்துள்ளனர். இந்த செய்தி தளபதி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Entertainment sub editor