தல அஜித்தின் பெற்றோர் இவர்கள் தான்.. பலரும் பார்த்திராத லேட்டஸ்ட் புகைப்படம் இதோ...!
முகப்பு > சினிமா செய்திகள்உலகெங்கும் கோடான கோடி ரசிகர்களை கொண்ட நடிகர் தல அஜித். பல பிரபலங்களுக்கும் இவர் பேவரைட் ஹீரோ என்பது மறுக்க முடியாத உண்மை. தன் ரசிகர்களை மிகவும் மதிக்கும் அவர், பல நேரங்களில் ரியல் லைப்பிலும் அவர்களின் மனம் கவர்ந்த மனிதராக விளங்குகிறார். இந்நிலையில் வரும் மே 1-ஆம் தேதி தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும், பல பிரபலங்களும் 'தல' அஜித் எக்ஸ்குளுசிவ் DP-யை டிரெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் மற்றுமொரு போட்டோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. ஆம் தல அஜித் தன் பெற்றோருடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ தான் அது. பல சமயங்களில் தன் குடும்பத்தினரை மீடியா வெளிச்சத்திற்கு விலக்கியே வைத்திருப்பவர் நடிகர் அஜித். இந்நிலையில் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது மிகவும் வைரல் ஆகி வருகிறது.