Pattamboochi

விஜய் சேதுபதி நடிப்பில் ரிலீசான மாமனிதன் படத்தில் மங்காத்தா REFERENCE.. இதான் காரணமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாமனிதன்' திரைப்படம் இன்று ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Mankatha BGM Theme Music in Maamanithan Movie Yuvan Shankar Raja

Also Read | ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட்! முழு தகவல்

இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி, தென் மேற்குப் பருவக்காற்று திரைப்படத்துக்குப் பின் சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல், தர்மதுரை மற்றும் மாமனிதன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் இடம்பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை.

தர்மதுரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தர்ம துரை படத்துக்கு அடுத்து சீனு ராமசாமி - விஜய் சேதுபதி மாமனிதன் படத்தில் இணைந்துள்ளனர்.

மாமனிதன் படத்துக்காக இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் ஷங்கர் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

Mankatha BGM Theme Music in Maamanithan Movie Yuvan Shankar Raja

யுவன் சங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான YSR பிலிம்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து இருந்தார். ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் இந்த படம் தமிழகம் மற்றும் கேரளாவில் வினியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மாமனிதன் படத்தில் மங்காத்தா படத்தின் ரெஃபரன்ஸ் இடம் பெற்றுள்ளது. படத்தின் டைட்டில் கார்டில் YSR Films தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் & லோகோ திரையில் தோன்றும் போது பின்னணி இசையாக மங்காத்தா படத்தின் தீம் மியூசிக் ஒலிக்கிறது. மங்காத்தா படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. மங்காத்தா படத்தின் வெற்றிக்கு யுவனின் பின்னணி இசை முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

Mankatha BGM Theme Music in Maamanithan Movie Yuvan Shankar Raja

ஏற்கனவே தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்தின் பின்னணி இசையாக வேலையில்லா பட்டதாரி படத்தின் தீம் மியூசிக்கும், சிவகார்த்திகேயனின் SK Productions நிறுவனத்தின் பின்னணி இசையாக டாக்டர் படத்தின் தீம் மியூசிக்கும் இருப்பது குறிப்பிடத்தக்கது

Also Read | தனுஷ் உடன் நித்யா மேனன்.. 'திருச்சிற்றம்பலம்' படத்தின் செம கலர்ஃபுல் போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Mankatha BGM Theme Music in Maamanithan Movie Yuvan Shankar Raja

People looking for online information on Maamanithan Movie, Mankatha BGM Theme Music, Yuvan Shankar Raja will find this news story useful.