o2

மைக் மோகன் படத்தில் யோகிபாபுவின் அசத்தல் கேரக்டர்.. தெறிக்கவிடும் BTS புகைப்படங்கள்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தமிழில் பவுடர், தாதா 87 ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

yogibabu joins 80S Actor mohan new film viral pics

இவர் தற்போது பிரபல 80ஸ், 90ஸ் கிட்ஸ்ன் ஃபேவ்ரைட் நடிகர் மைக் மோகன் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோரை இணைத்து ஹரா எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். நடிகர் மோகனும் குஷ்புவும் 80களின் இறுதியில் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்து உருவாகவிருக்கும் முதல் தமிழ்ப் படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக இதுகுறித்து நம்மிடையே பிரத்தியேகமாக பகிர்ந்துகொண்ட இப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ, “இதுவரை இவர்கள் இருவரும் தமிழில் இணைந்து நடிக்கவில்லை. கோவை, ஊட்டி பின்னணியில் இவர்கள் இருவருக்கும் இடையிலான இளம் வயது கதையும் இப்படத்தில் சொல்லப்படவிருக்கிறது. இப்படம் ஒரு 80ஸ், 90ஸ் நாஸ்டால்ஜியாவையும் தொட்டுச் செல்லும்.” என்று தெரிவித்திருந்தார்.

yogibabu joins 80S Actor mohan new film viral pics

மேலும், “இப்படத்தின் சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்படவிருக்கிறது. குஷ்பு மேடம் முன்பை விட தற்போது இன்னும் இளைத்து, இளமையாக காட்சியளிப்பது இப்படத்துக்கு கூடுதல் பலமாக இருக்கும். பலரும் மோகன் சாரை மெலோடி நாயகனாக பார்த்திருக்கிறாகள். இந்த படத்தில் வேற ஒரு ஆக்‌ஷன் நாயகனாக பார்ப்பார்கள்” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

yogibabu joins 80S Actor mohan new film viral pics

இந்நிலையில் இப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் யோகிபாபு இணைந்துள்ளார். அசத்தல் காமெடி மன்னனான யோகிபாபு மோகனுடன் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் இப்போது வைரலாகி வருகின்றன. மேலும் இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, சிங்கம் புலி, ஆதவன், தீபா, ஜெயக்குமார், சாம்ஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

yogibabu joins 80S Actor mohan new film viral pics

People looking for online information on Haraa, Khushboo, Manobala, Mohanlal, Yogi Babu will find this news story useful.