சீனுராமசாமி & ஜி வி பிரகாஷின் ஆக்ஷன் த்ரில்லர் ‘இடிமுழக்கம்’… First look எப்ப? லேட்டஸ்ட் Update
முகப்பு > சினிமா செய்திகள்
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியாகியுள்ளது.
சீனுராமசாமி – ஜி வி பிரகாஷ் கூட்டணி…
Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிப்பில், பிக்பாஸ் முகேன் நாயகனாக நடித்த “வேலன்” திரைப்படம் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இதையடுத்து அந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் “இடிமுழக்கம்” திரைப்படம் உருவாகி வருகிறது. கிராமத்து பின்னணியில் புதுமையான ஒரு திரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறது. NR.ரகுநந்தன் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.
முதல் முறையாக ஆக்ஷன் களத்தில்…
வழக்கமாக மென்மையாக கதைகளை இயக்கி வரும் சீனுராமசாமி முதல் முறையாக இடிமுழக்கம் படத்தில் ஆக்ஷன் களத்துக்கு மாறியுள்ளார். படம் பற்றி பேசிய படத்தின் தயாரிப்பாளர் முபாரக் “இயக்குநர் சீனு ராமசாமி அவரின் இயல்பான படங்களிலிருந்து மாறுபட்டு, முதன்முறையாக கிராமப்புற பின்னணியில் ஒரு திரில்லர் படத்தை இயக்குகிறார். இப்படம் ஆரம்ப நொடியிலிருந்து இறுதிவரை, எதிர்பாரா திருப்பங்களுடன், ஒரு பரபரபான திரைப்படமாக, திரையரங்கில் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தரும் படைப்பாக இருக்கும்.” எனக் கூறியிருந்தார்.
படப்பிடிப்பு நிறைவு…
இந்த படப்பிடிப்பு தொடங்கி குறுகிய நாட்களில் ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்துள்ளார் இயக்குனர் சீனுராமசாமி. இதையடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. சீனு ராமசாமி இயக்கியுள்ள மாமனிதன் திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸாகிறது. அதற்குப் பின்னர் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடிமுழக்கம் ஃபர்ஸ்ட் லுக்…
இந்நிலையில் தற்போது இடிமுழக்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஜூன் 13 ஆம் தேதி இடிமுழக்கம் படத்தின் முதல் லுக் பார்வை வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது சம்மந்தமான போஸ்டர் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- G V Prakash And Gautham Menon New Movie After Selfie
- G V Prakash Ayngaran Movie Release Delay Producer Viral Post
- G V Prakash's Ayngaran New Release Date Is Here
- G V Prakash Ayngaran Movie New Release Date
- G V Prakash Composing Music For Soorarai Potru Remake
- G V Prakash Composing Music For Soorarai Potru Remake
- G V Prakash Created Expectation About Sudha Kongara Movie
- G V Prakash Created Expectation About Sudha Kongara Movie
- Vijay Vetrimaaran Movie Latest Update From G V Prakash
- Vijay Vetrimaaran Movie Latest Update From G V Prakash
- Director Seenu Ramasamy Tweet Critics Few OTT Platforms
- Seenu Ramasamy Emotional Acharya Ravi Demise Tagged Bala Seeman
தொடர்புடைய இணைப்புகள்
- "VIJAY SETHUPATHI-ய பார்த்தா எங்க அப்பா நியாபகம் வருது.." - Seenu Ramasamy, Rk Suresh, Maamanithan
- 🔴VIDEO: தீப்பெட்டி கணேசன்-நான் உழைச்சு சாப்பிடுறேன்..வேற யாருக்கும் பண்ணாதீங்க..|THROWBACK INTERVIEW
- தீப்பெட்டி கணேசன் மறைவு... உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் | Renigunta
- WOW 😍 Veyyon Silli Cover Video | Suriya | GV Prakash | Soorarai Pottru
- Kanne Kalaimaane Official Making Video | Udhayanidhi Stalin | Tamannaah | Seenu Ramasamy
- Kanne Kalaimaane - Photos
- Kanne Kalaimaane | List of films releasing this weekend - Slideshow
- Kanne Kalaimaane | Probable Tamil releases in February 2019 - Slideshow
- Kanne Kalaimaane | 2019 First Quarter - Expected Tamil Film Releases - Slideshow
- Kanne Kalaimaane | Tentative list of Tamil movies to release in the second half of 2018 - Slideshow
- Jallianwala Bagh Vida STERLITE Kevalam! | Seenu Ramasamy On Sterlite Issue
- G V Prakash