பழம்பெரும் இயக்குனர் மரணமடைந்தார்... சோகத்தில் திரையுலகம்.... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபகாலமாகவே தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து துக்க சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முன்பதாக இயக்குனர் விசு, நடிகர் சேதுராமன், பாடகி பரவை முனியம்மா போன்றோர் அடுத்தடுத்து மரணமடைந்தனர், இந்திய சினிமாவிலும் பல கலைஞர்களின் இறப்பு செய்திகள் அடுத்தடுத்து வெளிவந்தன. தற்போது தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ரகுநாதன் அவர்கள் மரணமடைந்துள்ளார்.

பழம்பெரும் இயக்குனர் மரணம் அடைந்தார் சோகத்தில் திரையுலகம்popular director and producer ragunathan died who introduced Kamalhassan as a hero

முன்பதாக குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகர் கமல்ஹாசனை ஹீரோவாக 'பட்டாம்பூச்சி' என்ற  படத்தில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் இவர்தான். மேலும் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வரப்பிரசாதம், நீ வாழவேண்டும், அக்னிப்பிரவேசம், ராஜராஜேஸ்வரி, போன்ற பல படங்களை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் கூட  இவரது தயாரிப்பில் 'மரகதக்காடு' படம்  2018-ல் ரிலீசானது. அதுமட்டுமில்லாது இயக்குனராகவும் நடிகர் பிரபு, சுரேஷ், பாண்டியன் போன்றோரை இயக்கியுள்ளார். 1975ஆம் ஆண்டில் தொடங்கி இப்போது வரை தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற மனிதராக திகழ்ந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ரகுநாதன் மரணமடைந்த செய்தி திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பழம்பெரும் இயக்குனர் மரணம் அடைந்தார் சோகத்தில் திரையுலகம்popular director and producer ragunathan died who introduced Kamalhassan as a hero

People looking for online information on Death, Director, Producer, Ragunathan will find this news story useful.