"விஜய் சேதுபதி, பார்த்திபனுக்கு நன்றி", 200 பேர் முதலீட்டில் பிரம்மாண்ட படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புதுமையான முயற்சிகளுடன் கூடிய பிரம்மாண்ட படம் குறித்து பிரபல திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சத்யராஜ் முதன்மை வேடத்தில் நடிக்கும் படம் குறித்து பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் இருவரும் கௌரவ வேடத்தில் நடிக்கவிருக்கின்றனராம்.

KS Ravikumar to direct a film with Sathyaraj, Vijay Sethupathi, Parthiban details here | சத்யராஜ், விஜய் சேதுபதி, பார்த்திபன் நடிக்க கே.எஸ்.ரவிக்கும

இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரியுடன் இணைந்து திருப்பூர் சுப்ரமணியன் தயாரிக்கவிருக்கிறாராம். இந்த படத்தின் தயாரிப்பில் பிரபல தயாரிப்பாளர் பிரமீட் நடராஜனும் பங்கு பெறுகிறாராம்.

கிட்டத்தட்ட ரூ. 2 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்துக்கு திரைத்துறையை சார்ந்த 200 பேர் முதலீடு செய்யவிருக்கிறார்களாம். விருப்பமுள்ளவர்கள் தானாக முன்வந்து முதலீடு செய்யலாம் என்றும், முழுக்கதையும் தயாராகி, படப்பிடிப்பிற்கு முந்தைய நாளின் போதே முதலீடு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு வியாபார அடிப்படையில் சதவிகிதத்தில் சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படம் முதலில் நேரடியாக திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும், அதன் பிறகு 100 நாட்கள் அல்லது 10 வாரங்கள் இடைவேளைக்கு பிறகே ஒடிடி பிளாட்ஃபார்மில் வெளியாகும் என்று அவர் தெரிவித்தார்.

Entertainment sub editor