''ரசிகர்களை வரவழைக்க தியேட்டரில் பீர் விற்கலாம்'' - பிரபல இயக்குநர் வித்தியாச யோசனை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக மக்களை பாதுகாக்கும் நோக்கில் நான்காம் கட்ட ஊரடங்கு வருகிற மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில வணிகம் சார்ந்த செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக 'மதுப்பிரியர்களுக்கு' 7 வண்ணங்களில் டோக்கன்கள் வழங்கி அதன் மூலம் மதுபானம் விற்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானம் வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து காணொளிகளை நாம் செய்திகளில் அடிக்கடி காணமுடியும்.

இந்நிலையில் தமிழகத்தில் திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்சன் சார்ந்த பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், திரைத்துறை சார்ந்த மற்ற செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது திரைத்துறையினரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் தங்கள் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக திரையரங்க உரிமையாளர்களும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் 'நடிகையர் திலகம்' பட இயக்குநர் நாக் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைக்க வித்தியாசமான யோசனை ஒன்றை தெரிவித்தார். அதில், ''பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபு, ராணாவுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் போது, உதித்த எண்ணம். மற்ற நாடுகளைப் போல, முறையான அனுமதி பெற்று திரையரங்குகளில் பீர், ப்ரீஸர், ஒயின் போன்ற பாணங்களை விற்பனை செய்யலாம்.

அது மக்களை திரையரங்குகளை நோக்கி வரவழைக்க முடியும். மேலும் அது திரையரங்க வணிகங்களை பாதிக்கும்.  இது நல்ல யோசனையா? அல்லது கெட்ட யோசனையா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது மற்றொரு பதிவில், ''கண்டிப்பாக அது குடும்ப ரசிகர்களின் வருகையை பாதிக்கும். அதனை சில மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் முயற்சிக்கலாம். ஆனால் இது தீர்வு இல்லை. திரையரங்குகளில் மக்களை வரவழைக்க என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?  என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Entertainment sub editor