விவாகரத்துக்கு காரணம் புதிய காதலா? நவாஸுதின் சித்திக் மனைவி ஆலியா விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நவாஸுதின் சித்திக்-ஆலியா தம்பதியரின் விவாகரத்து வழக்கு ஒவ்வொரு நாளும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது, சமீபத்தில் பியூஷ் பாண்டே என்ற ஊடகவியலாளருக்கு ஆலியாவுடன் உறவு இருப்பதாக ஒரு சில ஊடகங்கள் வெளியிட்டன. பாம்பே டைம்ஸ் பத்திரிகைக்கு அண்மையின் பியூஷ் அளித்த பேட்டியில் இதற்குத் தன்னிலை விளக்கம் அளித்தார்.

Peeyush self explanation reg Nawazuddin and Aliya divorce

அதில் அவர் குறிப்பிட்டுள்ளது, ‘நவாஸுதீன் ஆலியா விவாகரத்து அறிவிப்பைப் பற்றி ஊடகங்கள் மூலம்தான் தெரிந்து கொண்டேன். இதில் நான் தேவையில்லாத பலிகடாவாக சிக்கியிருக்கிறேன். இந்த வதந்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை, கேலிக்குரியவை! என்னை ஏன் இதில் இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நவாஸ் மற்றும் ஆலியாவைச் சுற்றியுள்ளவர்களுக்கு அவர்களின் பிரச்சனை பற்றியும் அவர்களுக்கிடையே என்ன நடக்கிறது என்பது பற்றியும் தெரியும். நான் அதிலிருந்து விலகி இருக்கவே நினைக்கிறேன். என்னுடைய நல்ல பெயர் ஏன் களங்கப்படுத்தப்படுகிறது என்று தெரியவில்லை.

நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன், இதுபோன்ற வதந்திகள் மிகவும் வெறுக்கத்தக்கது. எனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இது சங்கடப்படுத்துகிறது. அதிர்ஷ்டவசமாக, என்னுடைய காதலி ஆலியாவுக்கு தெரிந்தவராக இருப்பதால் உண்மையை புரிந்து கொண்டார்.. எனது நலன்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்று எனது வழக்கறிஞரை அணுகுவேன்.

நவாஸ் மூலம் ஆலியாவை சந்தித்தேன். இன்று அவருடன் எனக்கு தொழில்ரீதியான பேச்சுக் கூட இல்லை, ஆனால் நான் நவாஸுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக நெருக்கமாக பணியாற்றினேன். அவருக்கு டேலண்ட் மேனேஜராக பணிபுரிந்தேன். மாஞ்சி - தி மவுண்டன் மேன் திரைப்படத்தை துபாய்க்கு எடுத்துச் சென்று அங்கு வெளியிட்டேன். துபாயில் ஒரு நடிப்புப் பள்ளியைத் திறக்க நவாஸ் விரும்பினார்.

அதற்கும் நான்தான் அவருக்கு உதவினேன். அவரது சகோதரர் ஷாமாஸ் கேன்ஸில் ஒரு குறும்படத்தை வெளியிட விரும்பினார், மார்க்கெட்டிங் போன்றவற்றைப் பார்க்க அவருடன் சென்றேன். நான் எப்போதும் அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறேன். நவாஸை ஒரு கலைஞராக நான் மதிக்கிறேன். அவர் ஒரு சிறந்த நடிகர் மற்றும் ஆரம்பத்தில் நிறைய சிரமப்பட்டார். தொடர்ந்து போராடிதான் அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். ஆனால், தற்போதைய நிலைமை அசெளகரியமாக இருக்கிறது, அதனால் இதில் நான் தள்ளியே இருக்க விரும்புகிறேன்.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ட்விட்டரில் கணக்கு தொடங்கியுள்ளார் ஆலியா. எனக்கு யாருடனும் எந்த உறவும் இல்லை. இதுகுறித்த எல்லா செய்திகளும் பொய். மத்தவங்களை காப்பாற்ற என்னுடைய பெயரை கெடுக்க கூடாது. பணத்தால் உண்மையை ஒருபோதும் விலைக்கு வாங்க முடியாது என்று கூறியுள்ளார் ஆலியா.

இந்த விவாகரத்திலிருந்து நவாஸுதின் ஆலியா தம்பதியர் கண்ணியத்துடன் வெளியே வருவார்கள் என்று அவர்களது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

Entertainment sub editor