''அவரோட பெரிய ரசிகன் நான்'', தன் favourite-ஐ பற்றி மனம் திறக்கும் ராக்ஸ்டார் அனிருத்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'இந்தியன் 2' படத்தில் முதன்முறையாக இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார் இளம் இசையமைப்பாளர் அனிருத்.  

Anirudh reveals he is a fan of Director Shankar

சமீபத்திய பேட்டி ஒன்றில் அனிருத் கூறியது, , "நான் யாராவது ஒரு இயக்குனரின் ரசிகன் என்றால், அது வேறு யாரும் இல்லை,  ஷங்கர் சார்தான். ஜென்டில்மேன், காதலன் போன்ற அவரது வெற்றிப் படங்களைப் பார்த்து வளர்ந்த 90’s கிட்ஸ் அனைவருக்கும் ஷங்கர் சார்தான் ஆதர்ஸம்' என்றார்.

மேலும் அவர் கூறியது, "நான் இதுவரை வேலை செய்த மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர் ஷங்கர் சார்.  நான் அதிக படங்கள் இசையமைக்கவில்லை, அதிகபட்சமாக 20  படங்கள் செய்திருப்பேன்,

ஆனால் இந்த குறுகிய காலத்தில் கிடைத்த இந்த வாய்ப்பு  நானே எதிர்பார்க்காதது.  இந்தியாவின் மிகப் பெரிய இயக்குனர்களில் ஒருவரான ஷங்கருடன் இணைந்து பணிபுரிவது சாதாரண விஷயம் இல்லை..அவர் எனக்கு பிரியமான நண்பராகவும், மூத்த சகோதரர் போலவும் அன்பாக நடந்து கொண்டார்.  என்னிடமிருந்து எப்போதும் பெஸ்டையே பெற நினைப்பார். எனவே நிச்சயமாக ' இந்தியன் 2 'எனக்கு மிகவும் சிறப்பான படமாக இருக்கும். "

திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை மீண்டும் தொடங்க அரசாங்கம் அனுமதித்ததைத் தொடர்ந்து, இதுவரை படமாக்கப்பட்ட படத்தின் எடிட்டிங்கும் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில், லாக்டவுன் முற்றிலுமாக முடிவடைந்ததும் 'இந்தியன் 2' வின் ஆடியோ வெளியீடு நடக்கும் என்று அனிருத் காத்திருக்கிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் கதாநாயகியராக நடிக்கின்றனர், சித்தார்த் மற்றும் பிரியா பவானி ஷங்கர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்:. நடிகர் விவேக் கமல்ஹாசனுடன் முதல் முறையாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor