கார்த்தியின் சுல்தான் - 'அனிருத் மியூசிக்.. சம்மர் ரிலீஸ்.?!'.. தயாரிப்பாளர் கொடுத்த பளீச் பதில்.!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் கார்த்தி நடித்து வரும் சுல்தான் படம் குறித்து அதன் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வரும் திரைப்படம் சுல்தான். இத்திரைப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இத்திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். சுல்தான் படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சுல்தான் படம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. சுல்தான் திரைப்படம் அடுத்த ஆண்டு சம்மருக்கு வெளியாகவுள்ளதாகவும், இது காஷ்மோரா போல ஃபேன்டஸி திரைப்படம் எனவும் கூறப்பட்டது. மேலும் இப்படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அது மாற்றப்பட்டு, தற்போது விவேக் மெர்வின் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ''கார்த்தியின் சுல்தான் பற்றி கூறப்படும் இது போன்ற தகவல்கள் எதுவுமே உண்மையில்லை'' என பதிவிட்டுள்ளார். தயாரிப்பாளரின் இந்த பதிவு மூலம், சுல்தான் திரைப்படம் குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Nothing is True😬 #Sulthan https://t.co/xqF6BhVuGj
— S.R.Prabhu (@prabhu_sr) May 21, 2020