லாக்டவுன் நேரத்தில் கணவருக்கு முடி வெட்டும் பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படம்...!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. அதன் பரவலை தடுக்க இப்போதைக்கு ஒரே வழி சமூக இடைவெளியை பின்பற்றுவது தான். எனவே மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆண்கள் சந்திக்கும் சிரமங்கள் கொடியது. முடிவெட்டும் கடைகள் மூடப்பட்டு இருப்பதால். பலரும் முகத்தில் தாடி, மீசை வளர்ந்து காணப்படுகின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமை தான்.
![லாக்டவுன் நேரத்தில் கணவருக்கு முடி வெட்டும் பிரபல நடிகை Popular actress turns hairstylist for husband during corona lockdown லாக்டவுன் நேரத்தில் கணவருக்கு முடி வெட்டும் பிரபல நடிகை Popular actress turns hairstylist for husband during corona lockdown](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/popular-actress-turns-hairstylist-for-husband-during-corona-lockdown-news-1.jpg)
இந்நிலையில் தமிழில் வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அதன்பிறகு அவர் பல தமிழ் படங்களில் நடித்தார். வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலில் அவர் ஆடியது வைரலானது. லாக்டவுன் நேரத்தில் தனது கணவருக்கு முடி வெட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Tags : Manisha Yadav, Husband, Hairstylist, Corona, Covid19