"என் கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும்", Eligible bachelors நோட் பண்ண வேண்டிய ஸ்வீட்டான ஆசைகள்!
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா பிரச்னை உலகையே உலக்கி எடுத்துக் கொண்டிருக்க, எல்லா துறைகளும் தற்காலிக ப்ரேக் எடுத்துள்ள நிலையில், சினிமா உலகமும் ஸ்தம்பித்துள்ளது.
பிரபல நடிகர்கள் தங்கள் ரசிகர்களை இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் சந்தித்து உரையாடி வருகின்றனர். அண்மையில் காஜல் அகர்வால் ஒரு பேட்டியில் சுவாரஸ்யமான சில கேள்விகளுக்கு பதில் கூறினார். அதில் அவரது வருங்கால கணவர் பற்றி கேட்கப்பட்ட போது காஜல் அகர்வால் கூறியது,
‘காதலிப்பதற்கு ராஜகுமாரன் தேவை இல்லை. சரியான இணையாக அவர் இருந்தால் போதும். மேலும் அவர் சிம்பிளாக இருந்தாலும், அதனால் எனக்கு எந்த கவலையும் இல்லை. என் எண்ணங்களையும் லட்சியங்களையும் புரிந்து கொண்டு என்னை எனக்காக காதலிப்பவராக இருக்க வேண்டும்’ என்று மனம் திறந்து கூறினார்.
இன்னொரு கேள்வியில் எத்தகைய கதாபாத்திரங்களில் நடிக்க அவர் ஆசைப்படுகிறார் என்று கேட்கப்பட்ட போது, ‘சேலன்ஜிங் ரோல்ஸ் செய்யப் பிடிக்கும்.. ஒரு படத்தைத் தேர்வு செய்யும் போது, அந்தக் கதாபாத்திரம் என் மனதை பாதித்தால் மட்டுமே அதைத் தேர்ந்தெடுப்பேன்.
தற்போது எனக்குப் பிடித்த ரோல்கள் கைவசம் உள்ளன. ஆனால் லாக்டவுன் பிரச்னையால் ஷூட்டிங் நடக்கவில்லை. விரைவில் பிரச்னைகள் முடிந்து ஷூட்டிங் தொடங்க காத்திருக்கிறேன்’ என்றார்.