பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்... பொதுவெளியில் தோலுரித்த அதிரடி சம்பவம்...!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பிரபலங்களுக்கும் அதே நிலைமை தான். பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் உறவாடி வருகின்றனர்.
பிரபல மலையாள நடிகை அனுமோல் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இவர் தமிழில் ஒரு நாள் இரவில், கண்ணுக்குள்ளே போன்ற சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிற்கு தொடர்ந்து பல நபர்கள் அந்தரங்க புகைப்படங்களை அனுப்புவதாகவும், இந்த வக்கிர புத்தி உள்ளவர்களை தான் தொடர்ந்து பிளாக் செய்து வருவதாகவும், எனினும் இந்த எண்ணிக்கை தற்போது மிகவும் அதிகரித்து இருப்பதால் தான் மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது "எனக்கு அந்தரங்க புகைப்படங்கள் அனுப்பும் ஒவ்வொருவருக்கும் சொல்லிக்கொள்கிறேன். நிறுத்துங்கள். நான் உங்களை பிளாக் செய்து சோர்ந்து போய்விட்டேன். அதிலும் ஒருவன் எனக்கு தொடர்ந்து அவனுடைய அந்தரங்க புகைப்படத்தை அனுப்பி கொண்டிருக்கிறான். இதே நிலைமை தொடர்ந்தால் நான் சைபர் கிரைமில் புகார் அளிப்பது நிச்சயம். அதேபோல் பெண்களுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பும் உங்களுக்கு அவர்களிடம் கிடைக்கப்போவது வெறுப்பு மட்டுமே" என்று அதிரடியாக கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான இதுபோன்ற குற்றங்கள் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டும்.