சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் கண்ணாடி அணியும் சூர்யா பட ஹீரோயினின் மகள் - வைரலாகும் வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யாவுடன் 'வாரணம் ஆயிரம்' படம் மூலம் தமிழில் அறிமுகமான ஷமீரா ரெட்டி, அஜித்துடன்
'அசல்', 'வெடி', 'வேட்டை' உள்ளிட்ட படங்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
ஷமீரா ரெட்டிக்கும், அக்ஷய் வர்தே என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து தற்போது லாக்டவுன் நேரத்தில் குழந்தைகளின் செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் அவரது மகள் நைரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் கண்ணாடி அணியும் வீடியோவை சூப்பர் ஸ்டாருடன் ஒப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபலங்கள் முதல் குழந்தையின் ஸ்டைலை புகழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Tags : Sameera Reddy, Rajinikanth, Superstar