கொரோனாவால் விவசாயத்தில் இறங்கிய வாரிசு நடிகை...இதுக்கு பேரு தான் Safety விவசாயமாம்..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவுகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மக்கள் வீட்டில் இருக்கின்றனர். படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பிரபலங்களும் வீட்டில் இருக்கின்றனர். சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் தங்கள் அன்றாட வேலைகளை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை கீர்த்தி பாண்டியன் தற்போது ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். இவர் நடிகர் அருண்பாண்டியனின் மகள் ஆவார். சமீபத்தில் வெளியான 'தும்பா' படத்தின் மூலம் அறிமுகமான இவர், பின்பு மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "விவசாயம் செய்வதற்கு இது தான் ஏற்ற நேரம்" என்று கூறி கூறியுள்ளார். மேலும் அவர் "யாரும் தவறாக நினைக்க வேண்டாம். இந்த இடம் எங்களது வீட்டிற்கு சொந்தமான நிலம். யாரும் நுழையமுடியாத வகையில் வேலி அமைத்து இருக்கிறோம். எனவே அரசின் வழிமுறைகளை பின்பற்றி தான் விவசாயம் செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Landscaping! ♥️
Let the farming begin 🙌🏽 #quarantine #farming
(Again, this is our quarantine gated home property, it is not a public area. We are being very much responsible 🙃) pic.twitter.com/j3e7xkgwPu
— Keerthi Pandian (@ikeerthipandian) April 17, 2020