மது விற்பனை செய்த 'திரௌபதி' நடிகர் கைது - ''அவர் என் நண்பர் தான்...'' - இயக்குநர் அதிரடி பதில்
முகப்பு > சினிமா செய்திகள்ஊரடங்கின் காரணமாக அத்தியாவசியத் தேவைகள் தவிர பிற கடைகள் இயங்கவில்லை. குறிப்பாக மதுபானக்கடைகள் போன்றவை இயங்காததால் சட்ட வரோதமாக மது விற்பனை செய்யப்படுவது, கள்ளச்சாராயம் உற்பத்தி செய்வது போன்ற செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் 'திரௌபதி' உள்ளிட்ட படங்களில் சிறுவேடங்களில் நடித்து வந்த ரிஸ்வான் என்பவர் சென்னையில் அதிக விலைக்கு மது விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்நிலையில் இந்த சம்பம் குறித்து ரசிகர் ஒருவர் இயக்குநர் மோகன்.ஜியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், ''அவர் என் நண்பர் தான்.. பெயர் ரிஸ்வான்.. நடிகர்.. பலகுரல் மன்னன்.. சன் மியூசிக்கில் முன்னாள் வீடியோ ஜாக்கி.. இது கண்டிக்கத்தக்க ஒரு செயல்.. இதற்கான தண்டனையை அனுபவிக்க போறார்.. நான் எதிர்பாராத ஒரு செய்தி இது.. '' என்று பதிலளித்துள்ளார்.
அவர் என் நண்பர் தான்.. பெயர் Rizwan Rizu.. நடிகர்.. பலகுரல் மன்னன்.. Sun music முன்னாள் Video jockey.. இது கண்டிக்கத்தக்க ஒரு செயல்.. இதற்கான தண்டனையை அனுபவிக்க போறார்.. நான் எதிர்பாராத ஒரு செய்தி இது.. https://t.co/hzGHBtCPFS
— Mohan G 🔥❤️ (@mohandreamer) April 19, 2020