''உண்மை காதல் இன்னமும் இருக்கு, நான் அப்படியான லவ்வை..'' - காதல் குறித்து நடிகை த்ரிஷா பளீச்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதல் குறித்து மனம் திறந்து பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி ஹீரோயினாக கலக்கி வருபவர் த்ரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த நடித்த இவர், விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் ரசிகர்களுக்கு ஜானுவாக சூப்பர் ட்ரீட் கொடுத்தார். இதனிடையே ராங்கி, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட இவரின் படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.
இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது வாழ்க்கையின் காதலை சந்தித்து விட்டீர்களா என்ற ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், 'இப்போது அப்படி ஒன்றை நான் சந்திக்கவில்லை' என பதிலளித்துள்ளார். மேலும் காதலை பற்றி கேட்ட போது, ''அது பட்டாம்பூச்சி போன்ற உணர்வை கொடுப்பது. உண்மை காதல் இன்னமும் இருக்கிறது. அது இல்லாமல் வாழவே முடியாது.' என காதல் குறித்த கேள்விகளுக்கு பளீச் பதில்கள் கொடுத்துள்ளார் த்ரிஷா.