CORONA : டாக்டர் பணிக்கு திரும்பிய நடிகர் - மனிதநேயத்திற்கு Best உதாரணம் - குவியும் பாராட்டுக்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். தன்னார்வலர்களும், பிரபலங்களும், சினிமா துறையை சேர்ந்தவர்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.

கொரோனாவால் டாக்டர் பணிக்கு திரும்பிய பிரபல நடிகர் Popular actor turns into doctor to serve Corona Patients

அந்த வகையில்  தற்போது இந்தி சினிமாவை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகரும்,  திரைப்பட நடிகருமான ஆஷிஷ் கோகலே மிகப்பெரிய உதவி செய்துள்ளார். அதாவது கொரோனவால் வாடும் மக்களுக்கு உதவ இந்த ஊரடங்கு நேரத்திலும் உயிரைப் பணயம் வைத்து, தனது மருத்துவப் பணிக்கு திரும்பியுள்ளார். மக்களுக்கு ஒரு ஆபத்து வரும்போது தனது பணிக்கு திரும்பிய நடிகரை மக்கள் அனைவரும் வாழ்த்தியும்  பாராட்டியும் வருகின்றனர். இவர் பிரபல சோனி தொலைக்காட்சியின்Tara From Satara நிகழ்ச்சியில் நடித்துள்ளார். மேலும் ஜீ டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடரான KumKum Bhagya-விலும் நடித்திருந்தார். மேலும் அக்ஷய் குமாருடன் 'கப்பா'ர் படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor