நடிகை ஸ்ரேயாவை பற்றி மோசமாக கமெண்ட் செய்த நெட்டிசன்... கணவர் கொடுத்த சரியான பதிலடி...!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ், தென்னிந்திய மொழிகள், ஹிந்தி மற்றும் ஹாலிவுட்டிலும் தடம் பதித்து முன்னனி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா. பின்பு ரஷ்யாவை சேர்ந்த தனது காதலர் ஆண்ட்ரேயை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார். தற்போது ஸ்பெய்னில் இருக்கும் அவர். சமூக வலைத்தளங்களில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். தனது கணவர் தனக்கு கிடைத்த வரம் என்றும், தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில் ரசிகர்கள் முன்பு LIVE-ல் வந்தார் ஸ்ரேயா. அவரது கணவரும் உடன் இருந்தார். அப்போது ஒரு நெட்டிசன் மோசமாக கமெண்ட் செய்தார். 'உங்கள் மார்பகங்கள் அழகாக உள்ளது' என்று கூறினார். இதனைப் பார்த்த ஸ்ரேயா தர்மசங்கடத்தில் அதனை கண்டுகொள்ளாமல் அடுத்த கமெண்டிற்கு நகர, கணவர் ஆண்ட்ரே செய்ததது தான் தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் அந்த நெட்டிசனை பார்த்து "நீங்கள் சொன்னதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஸ்ரேயாவை பற்றி இன்னும் அதிக கமெண்ட்டுகளை எதிர்பார்க்கிறேன்" என்று நெத்தியடி பதிலை கூறினார். இந்த பதில் தற்போது சமூக வளைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.