"அவ என் பொண்டாட்டிங்க, நான் அதை ஏத்துப்பேன். உங்கள மாதிரி இல்ல" - வைரலாகும் சிம்புவின் வீடியோ..!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்து இன்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்னுடன் வைத்திருப்பவர் நடிகர் சிம்பு. சமீபத்திய படங்கள் சில சரியாக போகாவிட்டாலும், அவரது ரசிகர்கள் அவரை ஒருபோதும் விடுவதில்லை. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் அவரது குணம் பலருக்கும் பிடிக்கும்.
கொரோனா ஊரடங்கு காரணமாக சிம்பு தனது வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் அவர் சமைக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நேரத்தில் குடும்பத்தினருக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து தருகிறார் சிம்பு. அவருக்கு சமையல் கற்றுக் கொடுத்தவர் நடிகர் விடிவி கணேஷ் தான்.
சமைத்துக்கொண்டே இருவரும் பேசிக்கொள்ளும் ஒரு வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் விடிவி கணேஷ் கூறும்போது "வரப்போகும் மனைவிக்கு சமைக்கும் வேலையே இருக்காது போல" என்று கூற, நடிகர் சிம்பு ஆவேசமாக "வர போகிறவள் என் வாழ்க்கை துணை. எப்பவும் சந்தோஷமா இருக்கணும். நான் உங்கள மாதிரி இல்லை" என்று ஜாலியாக வாக்குவாதம் செய்கிறார். இளைஞர்களை கவர்ந்திருக்கும் இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.
"அவ என் பொண்டாட்டிங்க, நான் அதை ஏத்துப்பேன். உங்கள மாதிரி இல்ல" - வைரலாகும் சிம்புவின் வீடியோ..! வீடியோ