****** - கொரோனாவை இதை விட மோசமா யாரும் திட்ட முடியாது... கழுவி ஊத்தி வீடியோ போட்ட பிரபல நடிகர்..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். தன்னார்வலர்களும், பிரபலங்களும், சினிமா துறையை சேர்ந்தவர்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ஒருவர் செய்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஹிந்தி நடிகர்
வருண் தவான் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் 'கொரோனாவுக்கு இது' என்று ஆரம்பித்து Beep சவுண்ட் கொடுத்து அசிங்க அசிங்கமாக திட்டுவது போல நடிக்கிறார். இந்நிலையில் இந்த வீடியோவை தற்போது பிரபலங்களும் லைக் செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கிற்கு முன்பு அவரது ‘Coolie No 1’ பட வேலைகள் முடிந்த நிலையில் ரிலீஸ் ஆவதற்கு தயாராக இருந்தது. இந்நிலையில் பட ரிலீஸ் காலவரையின்றி தள்ளி போய் இருப்பது குறிப்பிடத்தக்கது.