டாம் அண்ட் ஜெர்ரி மூலம் நம்மை சிரிக்க வைத்த இயக்குநர் திடீர் மரணம் - ரசிகர் பெரும் சோகம்
முகப்பு > சினிமா செய்திகள்90 கிட்ஸ்களின் குழந்தைப் பருவ பொழுதை இனிமையாக்கிய டிவி நிகழ்ச்சிகளில் முக்கியமானவை டாம் அண்ட் ஜெர்ரி. குறும்புகளுடன் ஜெர்ரி, டாமை இம்சிக்க, டாம் அதனை துரத்த என வயிறு குலுங்க சிரிக்கவைத்தன.

இப்படி நம்மை டாம் அண்ட் ஜெர்ரியின் நிகழ்ச்சியின் மூலம் சிரிக்க வைத்துக்கொண்டிருந்த இயக்குநர் ஜீன் டெய்ட்ச் (Gene Deitch) தற்போது அழ வைத்து விட்டார். ஆம் 94 வயதாகும் ஜீன் தற்போது தனது வீட்டில் மரணமடைந்து விட்டார்.
வயது முதிர்வு காரணமாக அவரது இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அனிமேட்டர் மற்றும் இயக்குநரான ஜீன் தனது டாம் அண்ட் ஜெர்ரி, பாப்பய் மூலம் நம்மை எப்பொழுதும் நம் நினைவில் இருப்பார் என்பது உறுதி.
Tags : Tom And Jerry, Popeye, Gene Deitch