மாஸ்டர் : "டிரெய்லரை பார்த்துட்டேன்... அந்த டையலாக் வரும்போது..." பிரபல நடிகர் அதிரடி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் 'மாஸ்டர்'. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மாளவிகா மோகனன்,சாந்தனு, ரமேஷ் திலக், அர்ஜுன் தாஸ் போன்ற பலர் படத்தில் நடிக்கின்றனர்.

மாஸ்டர் டிரெய்லர் மரண மாஸ் அப்டேட் கொடுத்த வில்லன் நடிகர்popular actor reveals exciting things about thalapathy vijay master trailer

இந்த படம் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி ரிலீசாவதாக இருந்தது. கொரோனா காரணமாக ரிலீஸ் காலவரையற்று   தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தளபதி ரசிகர்கள் மாஸ்டரின் டிரெய்லரையாவது எப்போது ரிலீஸ் செய்வார்கள் என்று காத்திருக்கின்றனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று பிரபல வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸ் லைவ் வந்திருந்தார். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அவர் கூறும்போது "மாஸ்டர் டிரெய்லரை இதுவரை 6 முறை பார்த்துவிட்டேன். தளபதி பேசும் அந்த ஒரு டயலாக் வரும்பொழுது மக்களின் ரியாக்ஷன் என்னவாக இருக்கப் போகிறது என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். காத்திருந்தாலும் அதற்கேற்ற பலனை மாஸ்டர் டிரெய்லர் கொடுக்கும். படம் ரிலீஸுக்கு முன்பாக ட்ரெய்லர் ரிலீஸ் ஆகும். சரியான நேரத்தில் படக்குழு அதனை ரிலீஸ் செய்வார்கள் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார். மேலும் மாஸ்டர் OTT-யில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்விக்கு "ஒரு ரசிகனாக வேண்டாம் என்று நினைக்கிறேன். ரசிகர்களுடன் அமர்ந்து தியேட்டரில் காலை 4 மணி ஷோ பார்க்க ஆவலாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

மாஸ்டர் : "டிரெய்லரை பார்த்துட்டேன்... அந்த டையலாக் வரும்போது..." பிரபல நடிகர் அதிரடி..! வீடியோ

Entertainment sub editor