தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' - லோகேஷ் கனகராஜ் ஃபோட்டோவுடன் வெளியிட்ட முக்கிய அப்டேட் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் 'மாஸ்டர்'. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நிகழ்த்திய உரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அனிருத் இசையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி படம் மீதான மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அரசு போஸ்ட் புரொடக்சன் பணிகளை மட்டும் தொடங்கலாம் என்று அறிவித்திருந்த நிலையில், மாஸ்டர் படத்தின் எடிட்டிங் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஃபோட்டோ ஒன்றை பகிர்ந்து, மாஸ்டர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் என்று ஹேஷ் டேக் மூலம் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி 'மாஸ்டர்' பட நடிகர் மகேந்திரன் Classic na என்று கமெண்ட் செய்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Go ahead, make my day ✌🏻#MASTER #POSTPRODUCTION

A post shared by Lokesh Kanagaraj (@lokesh.kanagaraj) on

Entertainment sub editor