மாஸ்டர், சூரரைப் போற்று தீபாவளி ரிலீஸ்..?! - இப்படி இவர் சொல்லும் காரணம் என்ன.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர், மற்றும் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் குறித்து பிரபல தியேட்டர் உரிமையாளர் கருத்து தெரிவித்துள்ளார். 

திபாவளிக்கு மாஸ்டர், சூரரைப் போற்று ரிலீஸ் | vijay's master andu suriya's soorarai pottru should release on diwaly popular theatre owner tweets

தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், திரையரங்கங்கள் மூடப்பட்டு இருக்கிறது. இதனால் சம்மரை குறி வைத்திருந்த பல திரைப்படங்கள் தள்ளி போயிருக்கின்றன. குறிப்பாக விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று, தனுஷின் ஜகமே தந்திரம் உள்ளிட்ட திரைப்படங்களின் ரிலீஸ் தள்ளி போயிருகின்றன. 

இந்நிலையில் வெற்றி தியேட்டர் உரிமையாளர் ராகேஷ் கௌதமன், இப்படங்களின் ரிலீஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், 'மாஸ்டர், சூரரைப் போற்று படங்கள் தான் மீண்டும் தியேட்டருக்கு ரசிகர்களை பெருமளவு ஈர்க்கும் வாய்ப்பு கொண்ட படங்கள். அதனால் அதன் தயாரிப்பு நிறுவனங்கள், படத்தின் ரிலீஸ் குறித்து முக்கியமான முடிவை எடுக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் அது தீபாவளி ரிலீஸாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்'' என அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இவ்விரு படங்களும் தீபாவளிக்கு ரிலீஸாகுமா என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க தொடங்கியுள்ளனர். 

 

Entertainment sub editor