'விஜய்யின் மாஸ்டர் பாடல்... 100 டாக்டர்களின் அழகான நடனம்.' - சிலிர்க்க வைக்கும் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் படத்தின் பாடலுக்கு 100 டாக்டர்கள் நடனமாடிய வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

விஜய் பாடலுக்கு டான்ஸ் ஆடிய 100 டாக்டர்கள் | 100 doctors dances to vijay's master kutti story song goes viral

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதில் மருத்துவர்கள், தூய்மை பணியார்கள் உள்ளிட்டவர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். அவர்களை பாராட்டும் விதமாக பலர் தொடர்ந்து தங்களால் முடிந்ததை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த கடினமான சூழலில் பணி செய்பவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக 100 டாக்டர் இணைந்து, விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடியுள்ளனர். மருத்துவ துறையைச் சேர்ந்த இவர்களின் இந்த அழகான வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் தமிழ் சினிமாவைச் சேர்ந்த குஷ்பூ, சுஹாசினி, ராதிகா, மாதவன் உள்ளிட்டோர், மருத்துவர்களுக்கு தங்களின் நன்றியையும் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர். 

 

 

'விஜய்யின் மாஸ்டர் பாடல்... 100 டாக்டர்களின் அழகான நடனம்.' - சிலிர்க்க வைக்கும் வீடியோ. வீடியோ

Entertainment sub editor