தல அஜித் அதிரடி...."விஜய்யுடன் சேர்ந்து, நான் ஏன் நடிக்க மாட்டேன்?"...வைரலாகும் பழைய வீடியோ...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் இருவேறு துருவங்களாக உயர்ந்து நிற்பவர்கள் விஜய் மற்றும் அஜீத். இருவருக்கும் தனித்தனியே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர்களின் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் தியேட்டர்கள் திருவிழா கோலமாக இருப்பது வழக்கம். அந்த வகையில் தல அஜித் தனது பில்லா படத்தின் போது தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தல அஜித் அதிரடி தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிக்காதது என் Thala ajith explains why he does not act with thalapathy vijay

அதில் தளபதி விஜய் உடன் மோதலா? என்று கேள்விக்கு அவர் "நானும் விஜய்யும் ஒருபோதும் எதிரிகளாக இருந்ததில்லை. எங்களுக்குள் இருப்பது போட்டி மட்டுமே. எல்லாத் துறைகளைப் போல நாங்களும் போட்டிப் போட்டு நடிக்கிறோம் அவ்வளவுதான்.

மேலும் பிரபல நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. ஏனென்றால் ஒரு படத்தில் குறைந்தது 1500 பேர் வேலை செய்கின்றனர். பெரிய நடிகர்கள் ஒன்றாக இணையும் போது கலைஞர்களின்  வாய்ப்புகள் குறையும். இருவருக்கும் பெரிய மார்க்கெட் இருப்பதால் தேவையில்லாத பாலிடிக்ஸ் உருவாகும். ரசிகர்கள் ஏமாந்து போவார்கள். அதுவுமில்லாமல் இயக்குனரின் தலைமேல் பெரிய பொறுப்பு வைக்கப்படும். இதை நான் விரும்பவில்லை" என்று தல அஜித் அதிரடியாக விளக்கமளித்துள்ளார்.

Entertainment sub editor

Tags : Ajith, Vijay, Clash