CORONA : பிரபல நடிகர் அதிரடி... படையப்பா பட பாணியில் செய்த உதவி...வைரலாகும் புதிய வீடியோ இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பல பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சல்மான் கான் செய்திருக்கும் உதவி தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

கொரோனாவுக்கு படையப்பா பட பாணியில் பிரபல நடிகர் நிவாரணம் Popular actor helps people during corona time in the style of padayappa film

அவர் 'Being Human' என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் கொரோனா நேரத்தில் பல உதவிகளை செய்து வந்த அவர், அருகிலிருக்கும் கிராமத்தினருக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்துள்ளார். மேலும் அவருக்கு பிரபல பாலிவுட் நடிகர்களான ஜாக்குலின் பெர்னாண்டஸ், லூலியா, கமல் கான் ஆகியோர் உதவி செய்தனர்.

மனித சங்கிலி போல வரிசையாக நின்று உணவுப் பொருட்களை அவர்கள் வண்டியில் ஏற்றும் அந்த வீடியோவை நடிகர் சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சரியான வாகனங்கள் கிடைக்காததால் மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் பொருட்களை அருகில் இருக்கும் கிராமத்துக்கு அவர்கள் கொண்டு சேர்த்து வருகின்றனர்.  நடிகர் சல்மான்கானின் இந்த செயல் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@jacquelinef143 @vanturiulia @rahulnarainkanal @imkamaalkhan @niketan_m @waluschaa @abhiraj88

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

Entertainment sub editor