கொரோனா தடுப்பூசி... ஆராய்ச்சிக்கு பிரபல நடிகர் ரத்த தானம்....யார் அவர்? நல்ல செய்தி வருமா...?
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலையில் பிரபலங்களுக்கும் இந்நோய் பரவி இருக்கிறது. அப்படி ஆஸ்கர் விருது வாங்கிய புகழ்பெற்ற நடிகர் டாம் ஹாங்ஸ் தான் இந்த நோய்க்கு முதலில் பாதிக்கப்பட்ட பிரபலம் ஆவார். அவரும் அவருடைய மனைவியும் ஆஸ்திரேலியா சென்று திரும்பிய பிறகு அவர்களுக்கு கொரோனா நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அதன்பிறகு மூன்று வாரங்கள் மருத்துவமனையில் இருந்த அவர் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் செய்திருக்கும் ஒரு செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று புகழ்பெற்ற பல பத்திரிகைகளுக்கும் இதுதான் ஹாட் நியூஸ்.
கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சிக்கு நடிகர் டாம் ஹாங்ஸ், மற்றும் மனைவி ரத்தம் கொடுத்திருக்கின்றனர். இந்த செய்தியை பகிர்ந்த அவர் "இந்த ஆராய்ச்சி வெற்றி பெற வேண்டும்" என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.