EXCLUSIVE : அதை பார்த்து 'தல' அஜித் ரியாக்ஷன் என்ன?... வைரலாகும் பிறந்தநாள் DP... அஜித் தரப்பு பதில்..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகெங்கும் கோடான கோடி ரசிகர்களை கொண்ட நடிகர் தல அஜித். பல பிரபலங்களுக்கும் இவர் பேவரைட் ஹீரோ என்பது மறுக்க முடியாத உண்மை. தன் ரசிகர்களை மிகவும் மதிக்கும் அவர், பல நேரங்களில் ரியல் லைப்பிலும் அவர்களின் மனம் கவர்ந்த மனிதராக விளங்குகிறார். இந்நிலையில் வரும் மே 1-ஆம் தேதி தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும், பல பிரபலங்களும் 'தல' அஜித் எக்ஸ்குளுசிவ் DP-யை டிரெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் நமது Behindhoods சேனல் சார்பில் இதுபற்றி தல அஜித்தின் ரியாக்ஷன் என்ன என்று தெரிந்துகொள்ள அவரது அலுவலகத்திற்கு அழைத்தோம். அவர்கள் தரப்பில்"பொதுவாகவே தல அஜித்திற்கு இதுபோன்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விருப்பம் இல்லை. அதுவும் இந்த மாதிரி கடினமான சூழ்நிலையில் அவருக்கு இதில் சுத்தமாக விருப்பம் இல்லை. அவர் சொன்னதின் அடிப்படையில் நாங்கள் குறிப்பிட்ட பிரபலங்களை அழைத்து கனிவாக பேசினோம். அவர்களும் இதை புரிந்து கொண்டார்கள். அவர்களுக்கு நன்றி" என்று கூறியுள்ளனர்.