www.garudabazaar.com

காயத்துக்கு மீண்டும் சிகிச்சை எடுக்கும் பூஜா ஹெக்டே.. அவரே பகிர்ந்த வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பூஜா ஹெக்டே தனக்கு ஏற்பட்ட தசைநார்  மீண்டும் சிகிச்சை எடுத்து வருகிறார்.

Pooja Hegde Leg Injury Treatment LATEST Instagram Post

Also Read | ஷங்கர் இயக்கும் 'RC15'.. பாடல் காட்சிக்காக வித்தியாசமான லுக்கில் ராம் சரண்? சூப்பர் தகவல்!

2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே. துளு நாட்டின் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த இவர் தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தெலுங்கில் ஒக லைலா கோஷம் (2014) படத்தின் மூலம் பிரபலமான பூஜா ஹெக்டே. ஓக லைலா கோசம் மற்றும் ஆல வைகுண்ட புரமலு(2019) அரவிந்த சமேத வீர ராகவா (2018). துவ்வாடா ஜகந்நாதம் (2017), மகரிஷி (2019), கடலகொண்ட கணேஷ் (2019), ஹவுஸ்ஃபுல் 4 (2019), மற்றும் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் (2021) ஆகியவை இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தன. 2022 இல், ராதே ஷ்யாம், பீஸ்ட் மற்றும் ஆச்சார்யா ஆகிய படங்களில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

Pooja Hegde Leg Injury Treatment LATEST Instagram Post

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமான நடிகை பூஜா ஹெக்டே. 22 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை பெற்ற இன்ஸ்டாகிராம் கணக்கு உடையவர் பூஜா ஹெக்டே.

சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே, ஒரு மாதம் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். 3 கண்டங்களில் 4 நகரங்களில் சுற்றுலாவை முடித்து விட்டு மீண்டும் சல்மான் கான் நடிக்கும் "கிஷி கா பாய் கிஷி கி ஜான்"  படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

Pooja Hegde Leg Injury Treatment LATEST Instagram Post

சில தினங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காலில் காயத்துடன் கட்டுபோட்ட புகைப்படத்தை பூஜா ஹெக்டே வெளியிட்டு இருந்தார். அதில் இடது காலில் தசை நார் கிழிந்து விட்டது என குறிப்பிட்டிருந்தார்.

காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தையும் பூஜா ஹெக்டே பகிர்ந்து இருந்தார்.  பெரிய வாலியில் காலை உள் வைத்து அமர்ந்து இருப்பது போல அந்த புகைப்படம் புகைப்படம் அமைந்தது.

Pooja Hegde Leg Injury Treatment LATEST Instagram Post

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, வாலி நிறைய ஐஸ் கட்டிகளை நிரப்பி தசை நார் கிழிந்த இடது காலை உள் வைத்து சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் உதவியாளர் உதவியுடன் நடைபயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தற்போது "ஜனகனமன", சர்க்கஸ் மற்றும் சல்மான் கானுடன் "கிஷி கா பாய் கிஷி கி ஜான்", தெலுங்கில் மகேஷ் பாபு - த்ரி விக்ரம் இணையும் புதிய படம் என பல படங்களை பூஜா ஹெக்டே கைவசம் வைத்துள்ளார்.

Also Read | கதிரவன் புகார்.. BIGG BOSS கொடுத்த TWIST.. "இதெல்லாம் ஒரு கேஸ்".. பொங்கிய தனலெட்சுமி!

Pooja Hegde Leg Injury Treatment LATEST Instagram Post

People looking for online information on Pooja Hegde, Pooja Hegde Leg Injury Treatment will find this news story useful.