www.garudabazaar.com

கதிரவன் புகார்.. BIGG BOSS கொடுத்த TWIST.. "இதெல்லாம் ஒரு கேஸ்".. பொங்கிய தனலெட்சுமி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

BIGGBOSS Season 6 Tamil Day 46 Episode Glimpse

Also Read | 'வாரிசு' படப்பிடிப்பில் யானைகள்.. தயாரிப்பாளருக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்!

இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்தும் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. அது மட்டுமில்லாமல், இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்து பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது

பொம்மை டாஸ்க், அரசவை, அருங்காட்சியகம் டாஸ்க் என அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படுத்தி இருந்தது.

BIGGBOSS Season 6 Tamil Day 46 Episode Glimpse

அப்படி ஒரு சூழலில், இந்த வாராம் பிக்பாஸ் வீட்டில் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. அனைத்து போட்டியாளர்களும் தங்களது குற்றங்களை வழக்காக முன் வைக்க, அதனை நீதிமன்றம் மூலம் வாதாடி, அந்த வழக்கில் தீர்ப்பை எட்ட வேண்டும்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள்  பங்கேற்றனர்.

BIGGBOSS Season 6 Tamil Day 46 Episode Glimpse

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் நிவாஷினி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோவில் கதிரவன் "பிக்பாஸ் வீட்டில் தட்டுப் பாத்திரங்கள், குவளைகள் கழுவாமல் அங்காங்கே கிடப்பதாக புகார் கூறினார். மேலும் மைனா நந்தினி மீது புகார் கொடுப்பதாகவும்" பிக்பாஸிடம்

கூறினார்.

BIGGBOSS Season 6 Tamil Day 46 Episode Glimpse

"மைனா இந்தவார தலைவர் என்பதால் மைனா அதற்கு பொறுப்பேற்க முடியாது. நீங்கள் இதை செய்தவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்" என்று பிக்பாஸ், கதிரவனுக்கு அறிவுறுத்தல் செய்கிறார். 

பிக்பாஸ் அறிவுரையை ஏற்று கதிரவன் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் ஆஜர் படுத்துகிறார். அப்போது கூடும் தனலெட்சுமி, "இதெல்லாம் ஏத்துக்கவே முடியாது. பாத்திரங்களை கழுவிய நாங்கள் இங்கே உட்கார்ந்து இருக்கோம். இதெல்லாம் ஒரு கேஸ்" என  தனலெட்சுமி கூறுவது போல வீடியோ அமைந்துள்ளது.

 

Also Read | ஷங்கர் இயக்கும் 'RC15'.. பாடல் காட்சிக்காக வித்தியாசமான லுக்கில் ராம் சரண்? சூப்பர் தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

BIGGBOSS Season 6 Tamil Day 46 Episode Glimpse

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Dhanalakshmi, Vijay Television, Vijay tv, VJ Kathiravan will find this news story useful.