www.garudabazaar.com

அட.. ஸ்கூல்லயே பெரிய ரஜினி Fan-ஆ சசிகுமார்..? ‘அண்ணாமலை’ படம் பார்த்த சுவாரஸ்ய பின்னணி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சசிகுமார் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் பிரபலமானார்.  பல முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்துள்ள இயக்குநர் சசிகுமார், பல ஹிட் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பிலல் 'நான் மிருகமாய் மாற' திரைப்படம் கடந்த நவம்பர் 18ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது.

Sasikumar Exclusively shares memory rajinikanth annamalai movie

Also Read | பேட்டி நடுவே VIDEO CALL.. பிக்பாஸ் GP முத்துவிடம் நடிகர் சசிகுமார் வெச்ச கோரிக்கை..! Exclusive

சசிகுமாருடன் ஹரிப்ரியா, விக்ராந்த், சரத் அம்பானி, சங்கரை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் குறித்து பேசிய சசிகுமார், “எப்பொழுதும் ஒரு கிராமத்து கதாநாயகனாக வயலில் வேட்டியுடன் சுற்றித்திரிந்த எனக்கு ஒலிப் பொறியாளர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்த கதாபாத்திரத்திற்காக ஒலிப்பொறியாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் உதயகுமார் அவர்களை கூர்ந்து கவனித்தேன். படத்தில் அனைத்துமே புதியதாக இருக்கும். இதற்காக அனைவரும் கடினமாக உழைத்து உள்ளோம்.  படக்குழுவினர் அனைவரும் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக பங்களித்து பணியாற்றியுள்ளனர்” என கூறியிருந்தார்.

Sasikumar Exclusively shares memory rajinikanth annamalai movie

இதேபோல் சசிகுமார் நடிப்பில் நவம்பர் 25-ஆம் தேதி காரி எனும் திரைப்படம் வெளியாகிறது. சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் கலந்த அதிரடி ஆக்ஷன் படமாக இது உருவாகி உள்ளது. சர்தார் படத்தை தயாரித்த  பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மண் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் ஹேமந்த் இப்படத்தை இயக்கியுள்ளார்.  இந்த படத்தின் கதாநாயகியாக மலையாள நடிகை பார்வதி அருண் நடித்துள்ளார். 

இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்த இயக்குநர் சசிகுமார், பழைய திரைப்படங்களின் போஸ்டர்கள், படப்பெட்டி உள்ளிட்டவற்றை பார்த்து தம் பழைய நினைவுகளை அசைபோட்டார். அதில், “போர்டிங் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தபோது, கொடைக்கானலில் இரண்டே இரண்டு தியேட்டர்தான் இருந்தது அப்போது, அண்ணாமலை படம் அப்போது ரிலீஸ் ஆச்சு.

Sasikumar Exclusively shares memory rajinikanth annamalai movie

அப்போது எங்கள் மியூசிக் ஆசிரியர் ஜேம்ஸ் சார், எங்களுக்கு முன்பே டிக்கெட் எடுத்து வைத்திருக்க, நாங்கள் பசங்க எல்லாம் பாதுகாப்பாக சென்று ரகளையாக ஷோ பார்த்தோம். அதில் தான் மாட்டியும் கிட்டோம். ஓவராக சவுண்டு போட்டு படம் பார்த்தோம். ஆனால் என்னைதவிர அனைவரும் மாட்டிக்கொண்டார்கள். இந்த நேர்காணலின் மூலமே, அந்த கேங்கிற்கு தலைமை தாங்கியதே நான்தான் என என் பிரின்சிஸிபால்க்கு தெரியவரும். யாரும் கிளாஸ் கட் அடித்துவிட்டு படத்துக்கு போகாதீங்க என்பதுதான் இதன் நீதிக்கருத்து” என சிரித்தபடியே கூறினார்.

இதை பார்த்த பலரும் ரஜினி படத்தை பார்க்க பள்ளியில் இவ்வளவு வேலை செய்த சசிகுமார், அதே ரஜினி நடித்த பேட்ட படத்தில் ரஜினிகாந்த்தின் நண்பராக நடித்துள்ளாரே என வியந்து பாராட்டியும் புகழ்ந்தும் வருகின்றனர். மேலும் சசிகுமாரின அடுத்தடுத்த படங்களுக்கு தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். சசிகுமார் பகிர்ந்து கொள்ளும் மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களை காண, இணைப்பில் உள்ள முழு வீடியோவை காணலாம்.

Also Read | BREAKING : கமல்ஹாசனுக்கு என்ன ஆச்சு..? மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.! Kamal Health Update

அட.. ஸ்கூல்லயே பெரிய ரஜினி FAN-ஆ சசிகுமார்..? ‘அண்ணாமலை’ படம் பார்த்த சுவாரஸ்ய பின்னணி..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sasikumar Exclusively shares memory rajinikanth annamalai movie

People looking for online information on Annamalai, Baasha, Kaari, Naan Mirugamaai Maara, Rajinikanth, Sasikumar will find this news story useful.