’பொன்னியின் செல்வன்’ ராஜா கைவிட்ட புரவி இதுவா? – சுஹாசினி பகிர்ந்த ஷூட் ஸ்பாட் ஃபோட்டோ!
முகப்பு > சினிமா செய்திகள்மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இத்திரைப்படம் உருவாகிறது.

இத்திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஷ்வர்யா ராய், த்ரிஷா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பேங்காக்கில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் டீம் பாண்டிச்சேருக்கு புறப்பட்டு வந்துள்ளனர். இங்கு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஷூட்டின் புகைப்படம் ஒன்றை சுஹாசினி தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு அலங்கரிக்கப்பட்ட குதிரை மணற் பரப்பில் நிற்பது போன்ற இந்த ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags : Ponniyin Selvan, Mani Ratnam, Suhasini