பிரபல டைரக்டர் செய்யும் உதவி... பொன்னியின் செல்வன் குரு-சிஷ்யன் சீக்ரெட்!
முகப்பு > சினிமா செய்திகள்மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் டைரக்டர் பிஜாய் நம்பியார் பணிபுரிகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இத்திரைப்படம் உருவாகி வருகிறது விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஷ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இருந்து பிஜாய் நம்பியார் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். கையில் க்ளாப் போர்டுடன் அவர் இருக்கும் படத்தை பதிவிட்டு, என்றுமே மணி சாரின் உதவி இயக்குநர்தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். பிஜாய் நம்பியார் விக்ரமை வைத்து டேவிட், துல்கர் சல்மானை வைத்து சோலோ ஆகிய படங்களை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
#PonniyinSelvan #ManiSirAdForLife pic.twitter.com/TNURjbHgQg
— Bejoy Nambiar (@nambiarbejoy) February 5, 2020