ஏ.ஆர்.முருதகாஸ் உடன் இணைந்துள்ள வேலை ஓவர்... அடுத்து பொன்னியின் செல்வன் தான் ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

த்ரிஷா நடித்துள்ள ராங்கி படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

trisha's raangi movie status before ponniyin selvan shooting

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் த்ரிஷா. ரஜினி, விஜய் ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ள த்ரிஷா தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை அதிகம் தேர்ந்தெடுக்கிறார். இதையடுத்து நாயகி, மோகினி ஆகிய படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்நிலையில் த்ரிஷா தற்போது நடித்துவரும் ராங்கி படத்தை பற்றி தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். ராங்கி படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் கதையை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor