ஜெயம் ரவி தனது மனைவி குறித்து ட்வீட் - 'நம்ம பையன் எடுத்த ஃபோட்டோ... நம்ம Love எப்படி இருக்குனு...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவி நடித்துள்ள 'கோமாளி' திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து சாதனை புரிந்தது. அந்த படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு ஜெயம் ரவி தற்போது 'பூமி', மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Ponniyin Selvan Actor Jayam Ravi shared a Photo with His wife about Love

'பூமி' படத்தின் டீஸர் வருகிற பிப்ரவரி 29 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பொன்னியின் செல்வனுக்காக நீண்ட தலைமுடியுடன் கார்த்தி உள்ளிட்டோருடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், நம்முடைய காதல் நம்முடைய மகனின் கண்ணின் வழி காணும் போது எவ்ளோ அழகா இருக்கும் என்று இப்பொழுது உணர்கிறேன்'' என்றார்.

Entertainment sub editor