'பொன்னியின் செல்வனில் நடிக்கும் பிரபல ஹீரோவின் சின்ன வயசு ஃபோட்டோவை வெளியிட்ட சதீஷ்
முகப்பு > சினிமா செய்திகள்'கோமாளி' படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு ஜெயம் ரவி தற்போது 'பூமி', மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் பொன்னியின் செல்வனுக்காக நீண்ட தலைமுடியுடன் கார்த்தி உள்ளிட்டோருடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது.

இந்நிலையில் நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருவரின் சின்ன வயது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ''யாருனு கண்டுபிடிங்க'' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடிகர் ஜெயம் ரவி, ''ஏன் ஏன் இது இப்போ தேவையா'' என்று கேட்டிருந்தார். அதற்கு ரசிகர்கள் ஜெயம் ரவியிடம் இது நீங்களா ? என தொடர்ந்து கமெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில் ஜெயம் ரவிக்கு பதிலளித்த சதீஷ், ''அழகோ அழகு சகோ, உங்கள் மனசு மாதிரியே'' என்று கமெண்ட் செய்துள்ளார். சதீஷ் தற்போது சூப்பர் ஸ்டாருடன் இணைந்து 'தலைவர் 168' படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்க, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
Yen yen.. inniki idhu thevaya? 😬 https://t.co/0D9wM8aWtE
— Jayam Ravi (@actor_jayamravi) February 14, 2020