மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் இணைந்த மேலும் ஒரு பிரபல ஹீரோயின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜராஜ சோழனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கல்கி எழுதிய பொன்னியின் நாவலை மணிரத்னம் தற்போது அதே பெயரில் படமாக இயக்கிவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

Vikram, Karthi, Jayam Ravi, Aishwarya Rai, Mani Ratnam's Ponniyin Selvan, Sobhita Dhulipala To Join the team

இந்த படத்தில் விக்ரம் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், லால், அர்ஜூன் சிதம்பரம், அஸ்வின், மோகன் ராமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவி மர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

மேலும் இந்த படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து, லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் நடிகை ஷோபிடா (Sobhita Dhulipala ) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொன்னியின் செல்வன் டைட்டில் லுக்கை பகிர்ந்து இந்த படத்தில் நடிக்கவிருப்பதை அறிவித்துள்ளார்.

ஷோபிடா பாலிவுட்டில் 'ராமன் ராகவ் 2.0', தெலுங்கில் 'கூடச்சாரி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஷோபிடாவிற்கு நடிகர் துல்கர் சல்மான் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

🥺 #PonniyinSelvan #ManiRatnam

A post shared by Sobhita Dhulipala (@sobhitad) on

Entertainment sub editor