www.garudabazaar.com

பொன்னியின் செல்வனுக்கு முன், ஏ.ஆர்.முருகதாஸ் பணிபுரியும் படத்தில் த்ரிஷா பிஸி !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'96' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு நடிகை த்ரிஷா நடிப்பில் 'பரமபதம் விளையாட்டு', 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை 2' என அடுத்தடுத்து வெளிவரக் காத்திருக்கின்றன. தற்போது அவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க விருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Before Maniratnam's Ponniyin Selvan, Trisha in AR Murugadoss's Raangi Shoot

இந்நிலையில் அவர் நடித்து வரும் படங்களில் ஒன்றான ராங்கி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றுவருகிறது. படப்பிடிப்பு முடிந்து வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி படக்குழு நாடு திரும்புவர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

ராங்கி படத்தை எங்கேயும் எப்பொழுதும் பட இயக்குநர் சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத, லைக்க புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. சி.சத்யா இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

Entertainment sub editor