'தேங்க்யூ தல...' 'லவ் யூ தலைவா....' - 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' படங்களின் இயக்குநர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியான படம் 'பேட்ட'.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஸுதின் சித்திகி, சிம்ரன், திரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தனர்.  கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Karthik Subbaraj and Siva Tweets about 100 days Of Rajinikanth's Petta and Thala Ajith's Viswasam

மேலும் மற்றொரு பொங்கல் ரிலீஸாக வெளியான படம் 'விஸ்வாசம்'. தல அஜித், நயன்தாரா நடித்த இந்த படத்தை சிவா இயக்கியிருந்தார். தந்தை, மகள் இடையேயான பாசப்பிணைப்பை பேசிய இந்த படமும் ரசிகர்களின் ஆதரவை பெற்றது.

ஒரே நாளில் வெளியான இரண்டு படங்களும் தற்போது 100வது நாளை எட்டியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த 'பேட்ட' இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ''பேட்ட' படத்தின் மீது காட்டிய அன்புக்காக தலைவரின் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நன்றி.  படம் 100 நாட்களை கடந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.  பேட்ட படக்குழு சார்பாக லவ் யூ தலைவா என்று தெரிவித்துள்ளார்.

'விஸ்வாசம்' படத்தின் இயக்குநர்,  ''நன்றி தல அஜித் சார், தல ரசிகர்கள், நயன்தாரா மேம், ஜெகபதி சார் மற்றும் படத்தில் நடித்த எல்லா நடிகர்கள் மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவனருக்கும் நன்றி. மேலும் குடும்ப ரசிகர்கள், சத்ய ஜோதி பிலிம்ஸ், எங்களை நேசிக்கும் எல்லா மக்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.