கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லக்ஷ்மி மேனன், கருணாகரன், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்து கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா.
![Atharva plays lead role in Karthik Subbaraj's Jigarthanda telugu Remake Atharva plays lead role in Karthik Subbaraj's Jigarthanda telugu Remake](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-16/images/atharva-plays-lead-role-in-karthik-subbarajs-jigarthanda-telugu-remake-photos-pictures-stills.png)
இந்த படத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது. சந்தோஷ் நாராயணனின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பக்கபலமாக அமைந்தது.
இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக்காகிறது. எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தில் சித்தார்த் வேடத்தில் அதர்வா நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக மிருணாலினி நடிக்கிறாராம்.
படத்தின் மையக் கதாப்பாத்திரமான பாபி சிம்ஹா வேடத்தில் பிரபல நடிகர் வருண் தேஜ் நடிக்கிறாராம். வால்மீகி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் ஹரிஸ் ஷங்கர் இயக்குகிறாராம்.