பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பாடலுக்கு ‘பேட்ட’ திரைப்படத்தின் இயக்குநர் கார்த்த்க் சுப்புராஜ் கொடுத்திருக்கும் ரியாக்ஷனை தனது கற்பனை கலந்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணn தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குநராக அறிமுகமான ‘பீட்சா’ திரைப்படம் தொடங்கி ‘ஜிகிர்தண்டா’, ‘இறைவி’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
இருவரது கூட்டணியிலும் வெளியான சூப்பஹிட் பாடல்கள் பல ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட சந்தோஷ் நாராயணன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த ட்வீட்டில், ‘நான்-நின்னுக்கோரி வர்ணம்.. கார்த்திக் சுப்புராஜ்-சில்ற இல்ல பா’ என்ற கேப்ஷனுடன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் முன் பாடுவது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். தற்போது ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ‘ஜிப்ஸி’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Me: Ninnukoreee varnam KS: Sildra Illa Pa @karthiksubbaraj 😂😂 pic.twitter.com/BfkR88Pf8C
— Santhosh Narayanan (@Music_Santhosh) May 17, 2019