'செவ்வாய் கிரகத்துக்கு போகணும்கிறது தான் என்னோட டிரீம்' - 'சென்னை பழனி மார்ஸ்' டீஸர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஆரஞ்சு மிட்டாய்' படத்துக்கு பிறகு பிஜூ விஸ்வநாத் இயக்கும் படம் 'சென்னை பழனி மார்ஸ்'. இந்த படத்தை ஆரஞ்சு மிட்டாய் புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து விஜய் சேதுபதி தயாரிக்கிறார்.

Vijay Sethupathi's Chennai Palani Mars movie teaser is out

புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்துக்கு விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார். இந்த படத்துக்கு நிரஞ்சன் பாபு இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது.

இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. டீஸரில், 'செவ்வாய் கிரஹத்துக்கு போகணும்கிறது தான் என்னோட டிரீம்' என்கின்ற வசனம் ஒலிக்கிறது. அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகள் இந்த திரைப்படம் ஃபேன்டஸி அல்லது சயின்ஸ் பிக்சன் பட வகையைச் சேர்ந்ததோ என்கின்ற எண்ணம் எழுகிறது.

'செவ்வாய் கிரகத்துக்கு போகணும்கிறது தான் என்னோட டிரீம்' - 'சென்னை பழனி மார்ஸ்' டீஸர் வீடியோ