''அடியோடு அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது'' - பாரதிராஜா வேதனை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் குறிப்பிட்ட நடிகர்களுக்கு ஏற்ப தயாரிப்பாளர்களுக்கு பங்கு அளிக்கும் நடைமுறை பற்றி தெரிவிக்கப்பட்டன.

Bharathiraja release a press note about Tamilnadu theatre association

இதுகுறித்து இயக்குநர் சிகரம் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒரு சரியான  தலைமை இல்லாத சூழ்நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் எதிர்காலத்தை சூறையாடக் கூடிய ஒரு அபாயகரமான செயல் திட்டத்தை திருப்பூர் சுப்பிரமணியம் தலைமையில் இயங்குகின்ற தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்த அறிக்கையின் படி ரஜினிகாந்த், அஜித், விஜய் ஆகியோரின் படங்களுக்கு முதல் வாரத்தில் 60 சதவிகித வசூலையும், சூர்யா, ஜெயம்ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு 55 சதவீத வசூலையும், மற்ற நடிகர்களின் படங்களுக்கு 50 சதவிகித வசூலையும் அந்த படத்தை விநியோகம் செய்பவர்களுக்கு இவர்கள் தருவார்களாம்.

இந்த விகிதாச்சார முறை மட்டும் அமலுக்கு வருமானால்  ஏற்கனவே மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் விநியோஸ்தர்கள் வர்க்கம் அடியோடு அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.

திரை அரங்கு உரிமையாளர்கள் புதிதாக  எந்த முடிவை எடுத்தாலும் அதைப்பற்றி அந்த குழுவோடு கலந்து ஆலோசித்துவிட்டு அதற்குப் பின்னர் அந்த முடிவுகளைப் பற்றி தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

இவை எல்லாவற்றையும் மீறி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டால் இந்த முடிவுகளை எதிர்த்து மிகப் பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.