www.garudabazaar.com

1000 கோடி வசூல்.. பதான் படத்தின் டிக்கெட் விலையை குறைத்த தயாரிப்பாளர்! வைரல் அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாருக்கான் நடிக்கும் 'பதான்' படத்தின் டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Pathaan Movie Ticket Price Reduced in Selected Multi Plex Screens

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "முதல் படம் Music பண்ணப்போ, இமான் ஆசீர்வாதம் வாங்குன ஆட்டோ டிரைவர்".. மனம்கலங்கும் பின்னணி

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கடந்த ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகி உள்ளது. 5 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்த படமாக பதான் அமைந்தது.

இதனால் உலகம் முழுவதும் உள்ள  ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பழம்பெரும் யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படமான பதான் படம் IMAX வடிவத்திலும் ரிலீஸ் ஆகி உள்ளது. யாஷ் ராஜ் பிலிம்ஸின் Spy Universe படங்களில் நான்காவது படமாக பதான் படம் வெளியாகி உள்ளது. முன்னதாக சல்மான் கான்  ஏக் தா டைகர் (2012),  டைகர் ஜிந்தா ஹே (2017) ,  ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வார் (2019) திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Pathaan Movie Ticket Price Reduced in Selected Multi Plex Screens

Images are subject to © copyright to their respective owners.

பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் வில்லனாக நடித்துள்ளார். சல்மான் கான் கேமியோ ரோலில் டைகர் (ஸ்பை யுனிவர்ஸ்) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படம் உருவாகி உள்ளது.

Pathaan Movie Ticket Price Reduced in Selected Multi Plex Screens

Images are subject to © copyright to their respective owners.

பதான் படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 106 கோடி ரூபாயை வசூலித்தது.‌  முதல் இரண்டு நாளில் 219.6 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இந்தி சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக பதான் படம் ஏற்கனவே சாதனை படைத்தது. ஐந்து நாளில் பதான் படம் உலகம் முழுவதும் 543 கோடி ரூபாயை வசூலித்தது.  பதான் திரைப்படம் 28 நாட்களில் 1000 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தி சினிமா வரலாற்றில் முதல் ரிலீஸிலே அதிக வசூல் செய்த படமாக பதான் படம் சாதனை படைத்துள்ளது.

Pathaan Movie Ticket Price Reduced in Selected Multi Plex Screens

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் பதான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் யாஷ் ராஜ், டிவிட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (24.02 .2021) வெள்ளிக்கிழமை மட்டும் பதான் படத்தின் டிக்கெட் விலை 110 ரூபாயாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐநாக்ஸ், PVR, Cinepolis மற்றும் இதர தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் இந்த விலை குறைப்பு அமலுக்கு வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | "நான் Cup வாங்குனதுக்கு சமம்".. பிக் பாஸ் தனாவுக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!..

தொடர்புடைய இணைப்புகள்

Pathaan Movie Ticket Price Reduced in Selected Multi Plex Screens

People looking for online information on Pathaan, Shah Rukh Khan will find this news story useful.