www.garudabazaar.com

மிரட்டும் லுக்கில் ஷாருக்கான் - தீபிகா படுகோனே.. பதான் பட ரிலீஸ் தேதியை உறுதி செய்த போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

Pathaan Movie New Poster with Release Date IMAX

Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு'.. படத்தோட ஷூட்டிங் எப்போ முடியும்? FANS-க்கு செம சர்ப்ரைஸ் இருக்கு!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாக ரசிகர்கள் உள்ளனர்.

ஷாருக்கான், கடந்த வருடம் இயக்குனர் அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் (ஜவான்) நடிக்க ஒப்பந்தமானார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் (டங்கி) ஒரு படமும் கமிட் ஆனார்.

Pathaan Movie New Poster with Release Date IMAX

இந்த படங்களுக்கு முன்பே இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படத்தில் நடிக்க கமிட் ஆனார்.

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

Pathaan Movie New Poster with Release Date IMAX

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Pathaan Movie New Poster with Release Date IMAX

சமீபத்தில் ஷாருக்கான் தனது 57வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது வீட்டில் கூடிய ஆயிரக்கணக்கான ரசிகர்களை சந்தித்து ஷாருக்கான் கையசைத்த வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவின.

Pathaan Movie New Poster with Release Date IMAX

இந்நிலையில் பதான் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. மிரட்டலான தோற்றத்தில் கையில் துப்பாக்கியுடன் நடிகர் ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோனே போஸ்டரில் தோன்றியுள்ளனர்.

பழம்பெரும் யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படமாக உருவாகும் இந்த படம் IMAX வடிவத்திலும் ரிலீஸ் ஆக உள்ளது.

Also Read | FIFA: கால்பந்து உலகக் கோப்பை.. கத்தார் சென்ற நெல்சன்.. நம்மள விட பெரிய மெஸ்ஸி FAN போலயே!

தொடர்புடைய இணைப்புகள்

Pathaan Movie New Poster with Release Date IMAX

People looking for online information on Pathaan, Pathaan Movie, Pathaan Movie New Poster, Shah Rukh Khan will find this news story useful.